book

மாயா

₹198₹220 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷெண்பா
பதிப்பகம் :சுபம் பப்ளிகேஷன்ஸ்
வகை :நாவல்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 முதல் 21ம் தேதி வரை ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறவிருக்கும், 43வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் எனது புத்தம் புதிய நாவல், “மாயா!

திக்திக்கென்ற மனத்துடன், அறைக்குள்ளேயே நடந்தவளின் மனத்திற்கு நிம்மதி அளிக்கும் வகையில், வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. வேகமாக வந்து உறங்குவதைப் போலப் படுத்துக் கொண்டாள்.

கதவைத் திறப்பதும், பூட்டிவிட்டு மேலே வருவதையும் அவனது காலடி ஓசைகள் உணர்த்த, அசைவின்றி படுத்திருந்தாள்.

விளக்கைப் போடாமல் கட்டிலருகில் வந்தவன், மகனின் நெற்றியில் புரண்ட முடியை விலக்கி மென்மையாக முத்தமிட்டான். சில நொடிகள் நின்று இருவரையும் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

அவன் வெளியே வர எடுத்துக் கொண்ட பதினைந்து நிமிடங்களையும் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :